search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெங்காய ஊறுகாய்"

    வெங்காய ஊறுகாய் தயிர் சாதம், எலுமிச்சை சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சின்ன வெங்காயம் - கால் கிலோ,
    காய்ந்த மிளகாய் - பத்து,
    புளி - எலுமிச்சை அளவு,
    உப்பு - தேவையான அளவு,
    நல்லெண்ணெய் - 100 மில்லி,
    பெருங்காயம் - தேவையான அளவு,
    வெல்லம் - நெல்லிக்காய் அளவு,
    கடுகு - அரை டீஸ்பூன்.



    செய்முறை :

    வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

    கால் டீஸ்பூன் கடுகை வெறும் கடாயில் வறுத்து பொடித்து கொள்ளவும்.

    மிக்ஸியில் காய்ந்த மிளகாய், ஊற வைத்த புளி, உப்பு ஆகியவற்றை போட்டு விழுதாக அரைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கால் டீஸ்பூன் கடுகு, பெருங்காயம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த விழுதை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.

    ஊறுகாய் அடிபிடிக்காமல் அடிக்கடி கரண்டியால் கிளறிக்கொள்ளவும்.

    ஊறுகாய் சுண்ட சுருள வதங்கி எண்ணெய் பிரிந்து வெங்காயம் நல்ல மணம் வந்தவுடன் வறுத்து பொடித்த கடுகை போட்டு ஊறுகாயில் கலந்து ஆறிய பின் ஊறுகாயை காற்று புகாத டப்பாவில் வைக்கவும்.

    சூப்பரான வெங்காய ஊறுகாய் ரெடி.

    குறிப்பு - சின்ன வெங்காயத்தை அரைத்து சேர்க்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×